SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகத்தரம் வாய்ந்த கல்வி சேவையில்

6/27/2019 3:12:12 AM

கிரீன் பார்க் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ மெட்ரிக் பள்ளி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கடத்தூர் -சேலம் மெயின் ரோட்டில் கிரீன்பார்க் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. எங்களது பள்ளியில் கிராமப்புற மாணவர்கள் மீது தனி அக்கறை கொண்டு நகர்ப்புற பகுதிக்கு இணையான கல்வியுடன் செயல்பட்டு வருகிறது. எனக்கு சிறுவயதில் கிடைக்காத தரமான கல்வியை கிராமப்புறத்தில் வசிக்கும், மாணவ மாணவிகளும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்ட கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது: கடத்தூரில், சேலம் மெயின் ரோட்டில் கிரீன்பார்க் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது 2019-20ம் ஆண்டில் பிரிஜேி, முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. ஐசிஏஐ நடத்திய தேசிய அளவில் பட்டய கணக்கர் தேர்வில் நம் பள்ளி மாணவர்கள் முதல் நிலை தேர்வில் 36 பேரும், 2ம் நிலை தேர்வில் 5 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 2ம் நிலைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த 5 மாணவர்கள் புது டெல்லியில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

காவேரி தொலைக்காட்சி நடத்திய நம்ம ஊரு விஞ்ஞானி அறிவியல் கண்காட்சியில், நமது பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம், 3ம் இடம் பெற்று ரஷ்யாவில் உலக விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தேர்வானார்கள். புதுக்கோட்டையில் இந்தியன் யோகா அகடாமியில் நடந்த போட்டியில் சிறப்பிடம் பெற்று சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் முதல் மற்றும் 3ம் இடம் பிடித்தனர்.
தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில்,2ம் இடம் பிடித்துள்ளனர். மேலும், தர்மபுரி ஆராய்ச்சி மீடியா சார்பில் நடைபெற்ற மருத்துவ கண்காட்சியில் சிறப்பு அரங்கு அமைத்து முதலிடம் பிடித்தனர்.
ஜிஆர்டி நிறுவனம் நடத்திய பெற்றோர் ஆசிரியர் மாணவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்று பரிசு, பாராட்டுகளைப் பெற்றனனர். தர்மபுரி அரசு கலைக்கல்லூரி நடைபெற்ற கிராமிய கலை விழாவில் மாவட்ட அளவிலான விருதுகள் பெற்றுள்ள பாலக்கோடு மூகாம்பிகை கல்லூரியில் நடைபெற்ற கராத்தே போட்டியில், நம் பள்ளி மாணவர்கள் 32 பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். மாரத்தான் 5 கி.மீ தூரம் ஓட்டத்தில் மாணவர்கள் 32 பேர் சிறப்பிடம் பெற்றனர். வேத அகடாமியில் நடத்திய கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் 32 மாணவர்கள் பங்கேற்று மாநில மாவட்ட அளவிலான சாதனை படைத்துள்ளனர்.சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் முதல் மற்றும் 2ம் இடம், 3ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தர்மபுரி இந்து சமய அறக்கட்டளை சார்பில் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். நம் பள்ளியை மையமாகக் கொண்டு நடந்த இறுதித் தேர்வில் முதலாமாண்டு மாணவர்கள் 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தர்மபுரியில் நடந்த பிராத்மிக் இந்தி தேர்வில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் நாம் பள்ளி சார்பில் களப்பயணம், தன்னம்பிக்கை பயிற்சி, கல்வி சுற்றுலா போன்றவற்றில் பங்கேற்க வைத்து திறமையானவர்களை உருவாக்கி தொடர் சாதனை படைக்க வைக்கின்றோம். மத்திய, மாநில அரசின் அங்கீகாரத்தோடு தொடங்கப்பட்டுள்ள இப்பள்ளியில் 2018-19 முதலாம் ஆண்டில் 1760 மாணவர்களும். இரண்டாம் ஆண்டு 960 மொத்தம் 2720 மாணவ மாணவியர் தற்போது படித்து வருகின்றனர். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறோம். ஆடியோ வீடியோ வசதியுடன் கூடிய வகுப்பறைகள் அமைந்துள்ளது. 6ம் வகுப்பு முதல் நீட் ஐஐடி கோச்சிங் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே விடுதி வசதி உள்ளது. 45 கி.மீட்டர் சுற்றளவுக்கு 50 மேற்பட்ட வழித்தடங்களில் வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கேஜி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி உள்ளது. என பள்ளி தாளாளர் முனிரத்தினம் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2019

  22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்