SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கையுடன் பழகிய வாலிபர் கொலை அண்ணன் உள்பட 2 பேருக்கு ஆயுள்

6/27/2019 3:11:55 AM

தர்மபுரி, ஜூன் 27: தங்கையுடன்  தொடர்பு வைத்திருந்த வாலிபரை கொலை செய்த அண்ணன் உள்பட இருவருக்கு ஆயுள்  தண்டனை விதித்து, தர்மபுரி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தர்மபுரி  மாவட்டம், காரிமங்கலம் கேசப்பநாயுடுகொட்டாயை சேர்ந்த லாரி டிரைவர்  ரெங்கசாமி மகன் பூவரசன்(25). இவரது தாய் மாது, தனது மற்றொரு மகனுடன்,  பாலக்கோட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அகமது உசேன் மகன்  பிலால் (37). இவர் மஜித்தில் முன்பு முக்கிய பொறுப்பில் இருந்தார்.  பூவரசன், தனது தாயை பார்க்க வரும்போது, பிலாலின் தங்கையுடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்ததை  பார்த்த பிலால் அதனை கண்டித்துள்ளார். ஆனாலும், இருவரும் அடிக்கடி  தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு  ஏப்ரல் 1ம் தேதி, பிலால் மற்றும் அவரது நண்பரான சேலம் பொன்னம்மாபேட்டை  மஜீத் தெருவை சேர்ந்த ஜெயராமன் என்கிற அர்த்தநாரி(44) ஆகியோர் சேர்ந்து,  பூவரசனை காரிமங்கலம் அருகே பொன்னிகானூரில் உள்ள சோமலிங்க அய்யர்  பெரியேரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சயனைடு கலந்த களியை பூவரசனை சாப்பிட  வைத்துள்ளனர். பின்னர், இருவரும் சேர்ந்து பூவரசனின் கழுத்தை நெரித்து கொலை  செய்து விட்டு, அங்கிருந்து தலைமறைவாகினர். இதுகுறித்து ரெங்கசாமி கொடுத்த  புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிலால்,  அர்த்தநாரி ஆகியோரை கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை, தர்மபுரி  கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம்,  மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி  ஜீவானந்தம், பூவரசனை கொலை செய்த பிலால், அர்த்தநாரி ஆகியோருக்கு ஆயுள்  தண்டனையும், தலா ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம்  கட்ட தவறினால், மேலும் 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என  உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்