SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூர் ரயில் நிலையத்தில்

6/27/2019 12:34:22 AM

அரியலூர்,ஜூன் 27: அரியலூர் அண்ணாசிலை அருகில் அரியலூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர், இதில் அரியலூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட தலைநகராக அரியலூர் விளங்குவதால் அனைத்து சிறப்பு ரயில்களும் நின்று செல்ல தென்னக ரயில்வே ஆணைபிறப்பிக்க வேண்டும் என்றும், அரியலூர் ரயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் சென்னையிலிருந்து வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், பாசஞ்சர் ரயில்களும் இயங்க ஆவனசெய்ய வேண்டும், அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்கேற்ப சுரங்கபாதை அமைத்து தரவேண்டும், ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் 1மணி நேரத்திற்கு ஒருமுறை திருச்சி - விழுப்புரம் மார்க்கத்திற்கு மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.இதில் காங்கிரஸ் நகர தலைவர் சந்திரசேகர் துவக்கி வைத்தார், ஐஎன்டியூசி செயலாளர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவுில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.நீர்நிலைகளை பராமரிக்காததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு தமிழக அரசு நீர்நிலைகளை பராமரிக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பெரும்பாலும் கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களை நம்பியே இருக்க வேண்டி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்தததாலும், அண்டை மாநிலங்கள் தங்கள் சாகுபடி பரப்பை அதிகரித்ததால், தமிழகத்திற்கு தர வேண்டிய பங்கை தர மறுப்பதாலும், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் அண்டை மாநிலமும், இயற்கையும் என்று மட்டும் குறை கூற முடியாது.மற்ற மாநிலங்களில் உள்ளவற்றை விட தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள். மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களின் தேவைக்காக தமிழகம் முழுதும் லட்சணக்கான ஏரிகளை வெட்டி வைத்துள்ளனர். அந்த காலக்கட்டத்திலேயே பொறியியல் முறைப்படி ஒரு ஏரியில் தண்ணீர் 95 சதவீதத்தை தொட்டுவிட்டால், அந்தஏரியில் உள்ள உபரி நீர் போக்கி மூலம், அடுத்த ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏரிகளை வடிவமைத்தனர். அது மட்டுமல்லாமல் சமவெளிப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் வீணாகாமல் ஏரிகளில் சேகரமாகும் வகையில் வரத்து வாய்க்கால்களையும்களை முறையாக அமைத்திருந்தனர். இந்த அமைப்பின் காரணமாக பெரும் மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படாமலும், மழை பெய்யாத காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் மக்களை பாதுகாத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வரத்துவாரிகளை தூர்வாருதல் என்ற பெயரில் கரைகளை பலப்படுத்தும் பணிகளை மட்டுமே தமிழக அரசின் பொதுப்பணித்துறை செய்து வருகிறது. மணல் வெட்டும் இயந்திரங்கள் வராத காலக்கட்டத்தில் குடிமராமத்து மூலம் நீர்நிலைகளை அந்தந்த பகுதி மக்களே செய்தனர். அவ்வாறு பணிகளை மேற்கொள்ளும்போது, உதாரணமாக ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மண்ணை வெட்டி கரைகளில் கொட்டுவார்கள். அதனால் ஏரியும் ஆழமாவதோடு, கரைகளும் பலப்படுத்தப்பட்டன.ந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் தூர்வாருதல் என்ற பெயரில் ஒதுக்கும் நிதியில் இருந்து சுமார் 65 சதவீதம்கூட பணிகளை பார்ப்பதில்லை. அதுமட்டுமல்லாது பொதுப்பணித்துறையினர் கடமைக்காகவே தூர்வாரும் பணிகளை மேற்கொள்கின்றனர்;. இதனால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் மேடாகிவிட்டன. நீர்நிலைகள் மேடானதால், ஏரி உருவாக்கப்பட்டபோது, நிரம்பிய தண்ணீரில் பாதி அளவுகூட தற்போது ஏரியில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதேப்போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான குளம், குட்டைகளை தூர்வாராமல் இருப்பது, அவ்வாறு தூர்வாரினாலும், வரத்து வாரிகளை சீரமைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சேகரமான தண்ணீரில் தற்போது பாதி அளவு கூட சேமிக்க முடியாத நிலை உள்ளது.

ஏரி, குளம், குட்டைகளில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், அப்பகுதியில் இருந்த மரங்கள் பட்டுப்போய் விட்டன. இதனால் தமிழகம் முழுதுமே வெப்பக்காற்று வீசத் தொடங்கிவிட்டது. தமிழக அரசு நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரிக்காததால், தமிழகத்தில் பெருமழை பெய்யும்போது, வெள்ளத்தை கட்டுப்படுத்த தண்ணீரை கடலுக்கு திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது.கடந்த ஆண்டு கல்லணைக் கால்வாய் முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டிருந்தால், கல்லணையில் இருந்து சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து இருக்கலாம். 4 ஆயிரம் கனஅடி கல்லணைக் கால்வாயில் திறக்கப்பட்டிருந்தால், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கிவைத்திருக்கலாம். அவ்வாறு கடந்த ஆண்டு தண்ணீரை தேக்கியிருந்தால், தண்ணீர் தட்டுப்பாட்டால் கருகிய பயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
டெல்டா பகுதி மட்டுமல்லாது மானாவாரி பகுதிகள், நகரப் பகுதிகளிலும் ஏரி,குளங்கள் தூர்வாரப்படாததால், மழை பெய்யும் காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.

தமிழகத்தின் தலைநகரான செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. அந்த வெள்ளத்திற்கு பிறகாவது, போர்க்கால அடிப்படையில் செம்பரம்பாக்கம் ஏரியை முறையாக தூர்வாரினால், இன்னும் பல கன அடி தண்ணீரை கூடுதலாக சேமித்து, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாத்திருக்கலாம். இதேப்போல புழல் உள்ளிட்ட ஏரிகளையும், இந்த கோடை காலத்திலாவது, முறையாக தூர்வாரினால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
தமிழக அரசை நம்பி பலனில்லை என்ற நிலைக்கு வந்துவிட்ட பலர் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணி நடந்துவருகிறது. பொதுப்பணித்துறையை தன்னிடம் வைத்திருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக முழுவதும் உள்ள நீர்நிலைகளை முறைகேடு ஏதும் நடக்காமல், முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வராமல் தடுக்கலாம்.தமிழகத்தில்அனைத்து ரயில்களும் நின்று செல்லகோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் கடந்த ஆண்டு கல்லணைக் கால்வாய் முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டிருந்தால், கல்லணையில் இருந்து சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து இருக்கலாம். 4 ஆயிரம் கனஅடி கல்லணைக் கால்வாயில் திறக்கப்பட்டிருந்தால், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கிவைத்திருக்கலாம். அவ்வாறு கடந்த ஆண்டு தண்ணீரை தேக்கியிருந்தால், தண்ணீர் தட்டுப்பாட்டால் கருகிய பயிர்களை காப்பாற்றி இருக்கலாம். பொதுமக்கள் குற்றச்சாட்டு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்