SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 லாரிகள் பறிமுதல் வலங்கைமான் பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

6/25/2019 5:04:02 AM

வலங்கைமான், ஜூன் 25: வலங்கைமான் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக மழைபெய்யாத நிலையில் நேற்று மாலை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 6 மாதகாலமாக மழை பெய்யவில்லை. மழை இல்லாததால் கடும் வெப்பம் நிலவி வந்தது. அதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தனர். மேலும் கோடை நெல் சாகுபடி மழை இல்லாததால் போதிய வளர்ச்சி அடையாமல் உரிய மகசூலை அளிக்கவில்லை. அதே போன்று உளுந்து, பயறு, எள் உள்ளிட்டவைகளும் உரிய மகசூல் அளிக்கவில்லை. பருத்தியும் மழை இல்லாததால் அதிக பூச்சிதாக்குதல் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வலங்கைமான் பகுதியில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. ஆறு மாதத்திற்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

  • EcuadoranProtest2k19

    பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்