SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் விளக்கம் நெடுவாக்கோட்டை சித்தேரி ஏரியில் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்ததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

6/25/2019 5:03:53 AM

மன்னார்குடி, ஜூன் 25: மன்னார்குடி அருகே பாசனத்திற்கு தண்ணீர் தரக்கூடிய ஏரியில் உரிய அனுமதியின்றி வண்டல் மண் அடித்து ஏரியை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி த்த 2 லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டதால் மன்னார்குடி தஞ்சாவூர் இடையே போக்குவரத்து பாதிக்கப் பட்டது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமம் உள்ளது. இக்கிராம எல்லைக்குள் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் நெடுவாக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்காக தண்ணீர் பெற்று வந்தன. சித்தேரி ஏரி போதிய பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக தூர்ந்து கிடக் கிறது.இந்நிலையில் நேற்று மதியம் சித்தேரி ஏரியின் ஒரு பகுதியில் சிலர் வண் டல் மண்ணை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி ஏரியை துர்த்து வருவ தாக நெடுவாக்கோட்டை கிராம மக்களுக்கு தகவல் சென்றது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இளைஞர்கள் திரண்டு சித்தேரி ஏரி பகுதிக்கு சென்று அங்கு வண்டல் மண் எடுத்து வந்த லாரிகளை மடக்கி விசாரித் துள்ளனர். பின்னர் மண் எடுத்து வந்த 2 லாரிகளை விவசாயிகள் சிறை பிடித் தனர்.பின்னர் சித்தேரி ஏரியை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி கிராம மக்கள், இளைஞர்கள் ஆசைத்தம்பி, என்பவர் தலைமையில் மேலவாசல் குமரபுரம் என்ற இடத்தில் மன்னார்குடி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திடீ ரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், வருவாய் துறை சார்பில் மண்டல துணை வட்டாட்சியர்கள் ஜெய பாஸ்கர், சரவணகுமார், ஆர்ஐ மனோகரன், விஏஓ கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர்.அதன்படி உரிய அனுமதியின்றி வண்டல் மண் எடுத்து வந்த 2 லாரிகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு ஆவணங்களின் அடிப்படையில் ஏரியின் அளவு கணக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய் துறை அதி காரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அதனை ஏற்ற கிராம மக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்ற னர்.போராட்டத்தால் மன்னார்குடி தஞ்சாவூர் இடையிலான நெடுஞ்சாலை யில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

 • mexico_isai111

  இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்