SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பருத்தி வயல்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

6/25/2019 5:03:45 AM

மன்னார்குடி, ஜூன் 25: திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே கோயில்வெண்ணி கிராமத்தில் சாகுபடி செய்யப் பட்டுள்ள பருத்தி வயல்களில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் மற்றும் மண்ணியல்துறை உதவிப் பேராசிரியர் அனுராதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஆய்வு குறித்து, பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் கூறுகையில்,பருத்தி வயல்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதலின் அறிகுறிகள் தென்படு கின்றன. இவை இலைகளின் அடிப்பாகத்தில் கூட்டம் கூட்டமாக சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் முதலில் வெளிர்பச்சை நிறமாகவும், பின்பு பழுப்பு நிறமாகவும் மாற்றமடையும். மேலும் தேன்பாகு போன்ற கழிவுப் பொருட் களை இப்பூச்சிகள் வெளியேற்றுவதால் இவை கருமை நிற பூசணம் வளர ஏதுவாகின்றது. இவ்வகை பூசண வளர்ச்சியால் இலைகளில் ஒளிச்சேர்க்கை தடைபடுகின்றது.கட்டுப்படுத்தும் வழிமுறைகள்வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துத்தி உள்ளிட்ட களை செடிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் ஒட்டும் பொறி அல்லது மஞ்சள் நிறம் பூசப்பட்ட தகர டப்பாவின் மேல் ஆமணக்கு எண் ணெய் அல்லது கிரீஸ் தடவி ஏக்கருக்கு 10 என்ற விகிதத்தில் செடிகளின் வளர்ச்சியை விட ஒரு அடி உயரமாக இருக்குமாறு வைத்து வெள்ளை ஈயின் வளர்ந்த பூச்சிசிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

அதிக இடைவெளியில் செடிகள் இருக்கும்பொது இவற்றின் தாக்குதல் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கமுடியும். தழைச்சத்து உரங்களை பரிந்துரைக்க ப் பட்ட அளவிலேயே அளிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக அளிக்கும் போது செடிகளின் தழை வளர்ச்சி மிகுந்து வெள்ளை ஈயின் தாக்குதலும் அதி கரிக்கும். செயற்கை பைரித்ராய்டு மருந்துகள் வெள்ளை ஈக்களின் மறு உற்பத்தித்திறனை அதிகரிப்பதால் அவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.வயல் வரப்புகளில் தட்டைப் பயரை ஓரப் பயிராகப் பயிரிடுவதால் பொறி வண்டு, கிரைசோபிட் உள்ளிட்ட நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப் படுத்தப் படுகின்றன. தாவர பூச்சிக் கொல்லிகளான வேப்பெண்ணெய் 3 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மிலி அல்லது வேப்பெண்ணெய் சார்ந்த அசடிராக்டின் 0.03 சத மருந்தினை ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.

வயலில் தேவையான அளவு ஈரப்பதம் இருப்பின் உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்தான வெர்டிசிலியம் லிகேனி என்ற மருந்தினை ஒரு ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.வெள்ளைஈக்கள் ஒரு இலைக்கு 5 முதல் 10 பூச்சிகளுக்கு அதிகமானால் பொருளாதார சேதநிலை யைத் தாண்டி விடுவதால் அசிட்டாமாபிரைட் 20 எஸ்.பி.- 40 கிராம், டைய பென்தியூரான் 50 டபிள்யூ.பி. - 250 கிராம், ப்ளோனிகாமைட் 50 டபிள்யூ.ஜி. - 40 கிராம், இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். - 50 மில்லி, தயாமீத்தாக்ஸாம் 25 டபிள்யூ.ஜி. - 80 கிராம், பிப்ரோனில் 5 எஸ்.சி. - 800 மி.லி., பிரபினோபாஸ் 50 ஈ.சி.- 400 மி.லி. ஆகிய இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் வாயிலாக செடிகளிலுள்ள இலைகள் முழுவதும் குறிப்பாக அடிப்புற இலை கள் நன்கு நனையும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

 • bangladeshtrain

  வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

 • wildfireaus

  காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

 • hongkongprofire

  ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

 • chicagosnow

  பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்