SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் அப்புறப்படுத்த கோரிக்கை நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி

6/25/2019 4:44:54 AM

நாகை, ஜூன் 25: தினகரன் செய்தி எதிரொலியால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது.நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு நீண்ட தூரங்களில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்பவர்கள் குடிப்பதற்கு வசதியாக வைத்திருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி கஜா புயலின் போது சேதம் அடைந்தது. இதன் பின்னர் அந்த இடத்தில் மீண்டும் தண்ணீர் தொட்டி வைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த மே மாதம் 27ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி நகராட்சி சார்பில் வைக்கப்பட்டது. அதில் நகராட்சி லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டது.  நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் என்பதால் கலெக்டர் அலுவலகம் வந்த ஏராளமான பொதுமக்கள் தண்ணீரை குடித்து சென்றனர்.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்