SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரியாபட்டியில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

6/25/2019 2:10:16 AM

காரியாபட்டி, ஜூன் 25: காரியாபட்டி பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் குடிநீர் பிடித்து வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க பேரூராட்சியில் பலமுறை முறையிட்டும் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசுவிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்ற தங்கம் தென்னரசு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி காரியாபட்டி பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் இலவசமாக குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியின்போது பேரூர் செயலாளர் செந்தில், ஒன்றியச்செயலாளர்கள் செல்லம், கண்ணன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் தங்கதமிழ்வாணன், வார்டு செயலாளர் சக்திவேல், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சங்கரேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

  • HeatWaveBakesUS

    அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் அனல் காற்று: செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

  • DeraTalibanAttack

    பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்..: 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்