SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை விபத்தில் பெண் பலி உடலை சாலையில் கிடத்தி மறியல்

6/25/2019 1:00:15 AM

பெ.நா.பாளையம், ஜூன் 25: ஜம்புகண்டி அருகே மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை தடாகம் ரோடு கணுவாய் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். மருத்துவர். இவரது மனைவி ஷோபனா (46). இவர்களக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் ஷோபனா அவரது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதும், பள்ளி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம். இந்தநிலையில், நேற்று மாலை வழக்கம் போல் ஷோபனா தனது மகளை பள்ளியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இவர்களது வாகனம் ஜம்புகண்டி அரசு பள்ளி அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி, அசோகன் ஆகிய வாலிபர்கள் ஷோபனா வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் ஷோபனா பரிதாபமாக பலியானார். அவரது மகள் படுகாயமடைந்தார். மேலும், இரு வாலிபர்களும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

இந்நிலையில், வாலிபர்கள் இருவரும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்ததாகவும், இதனால் தான் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அப்பகுதி மக்கள் ஷோபனாவின் உடலை  ஆனைகட்டி சாலையில் கிடத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தடாகம் போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கோவை வடக்கு தாசில்தார் விஜயகுமார், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின் இறந்த பெண்ணின் உடல் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால்  அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்