SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர் பிரச்னையை தீர்க்காத அரசை கண்டித்து கடையநல்லூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

6/25/2019 12:52:26 AM

கடையநல்லூர், ஜூன் 25:  குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து கடையநல்லூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மக்கள் பிரச்னையை கண்டுகொள்ளாத எடப்பாடி அரசை கண்டித்து கடையநல்லூர் நகர திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் சேக்உதுமான் என்ற சேகனா தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, பொருளாளர் சேக்தாவூது, முன்னாள் எம்எல்ஏ ரசாக், மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப், காங்கிரஸ் நகர தலைவர் சமுத்திரம், மதிமுக நகர தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: மறைந்த திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது கடையநல்லூர் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சேர்ந்தமரம் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சங்கரன்கோவில், மானூர் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் என்று பல்வேறு திட்டங்களை உருவாக்கி குடிநீர் தந்தார்.

ஆனால் பைப்லைன் மூலமாக தண்ணீர் கொடுக்க முடியாத லாயக்கற்ற அரசுதான் தற்போது இருக்கிறது. குடிநீர் பிரச்னையை கையில் எடுத்து தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்ட பிறகுதான் எடப்பாடி குடிநீர் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். எனவே 1 நாள் விட்டு 1 நாள் சீரான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையநல்லூர் நகராட்சி சந்தை பகுதியில் புதிதாக கட்டப்படும் கடைகளின் வாசலை பேட்டை பகுதியில் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அமைத்தால் விரைவில் நகராட்சி அலுவலகத்தை கண்டித்து முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம்துரை, ஜெயக்குமார், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், டாக்டர்கள் சஞ்சீவி, சேக்முகம்மது, செங்கோட்டை ஒன்றிய சிறுபான்மை பிரிவு சாகுல்ஹமீது, காஜாமைதீன், மாநில பேச்சாளர் மாரித்துரை, வடகரை ராமர், கருப்பண்ணன், நகர நிர்வாகிகள் சங்கரன், மஸ்தான், அப்துல்வகாப், பால்துரை, சங்கர், மாரியப்பன், பெருமாள்துரை, அலி, சேகனா, சித்திக், முகைதீன்பிள்ளை, மணிகண்டன், ஜமீன்ஷாகிப், சுப்பு, பாலசுப்பிரமணியன், முருகையா, மக்தூம், சாகுல், அஸ்லாம், சுப்பையா, முருகன்,ஜபருல்லா, முஸ்தபா, தம்பு, ராமகிருஷ்ணன், ரமையா, ராமபுலி, சந்தனமாரி, தங்கவேலு, ரகுமத்துல்லா, அப்துல்காதர், சாகுல்ஹமீது, மயில்சாமி, செல்லத்துரை, நடராஜன், கருப்பையா, செல்லப்பா, ஹரிதாஸ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஷாஜகான், பொருளாளர் தங்கராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர். ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்