SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்குவரத்து கழக நிர்வாகம் செலவு செய்த தொழிலாளர்களின் பணம் ₹9,600 கோடியை வழங்க தமிழக அரசு மறுப்பு

6/19/2019 5:21:02 AM

நாகர்ேகாவில், ஜூன் 19 :  ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை வழங்க கோரி நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி பென்ஷன் வழங்க ேவண்டும். ெதாழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் ெசய்த பணத்தை வட்டியுடன் உடனே வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் நாளிலேயே பண பலன்கள் அனைத்ைதயும் வழங்க ேவண்டும் என்பன உள்ளிட்ட ேகாரிக்ைககளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித்ேதாட்டம் பணிமனை முன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்ைத ெதாடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் அய்யாத்துரை, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சைமன் வரவேற்றார். தொழில் நுட்ப பேரவை செயலாளர் பூதலிங்கம், ஏஐடியூசி  மாடசாமி, தயானந்தன், நிர்வாகிகள் தங்கப்பன், வேலாயுதம் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிமனை அலுவலக வாயிலில் நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்தனர். தங்கள் கோரிக்ைககள் நிறைவேற்றப்படாவிடில் அடுத்த கட்டமாக காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக இந்த கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன், ஒருங்கிணைப்பாளர் அய்யாத்துரை கூறியதாவது : சேவை துறை என்ற அடிப்படையில் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து கழகத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி, கூட்டுறவு சங்க நிதி, எல்.ஐ.சி. நிறுவன நிதி போன்றவற்றை பயன்படுத்தி அரசு போக்குவரத்து கழகத்துக்கு செலவு செய்கிறார்கள். அந்த வகையில் ₹9,600கோடியை பயன்படுத்தி தற்போது பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கும், பணி ஓய்வு பெற்றோருக்கும் வஞ்சனை செய்கிறார்கள். ஏப்ரல் 2018 ல் இருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கான பண பலன்கள், ஜனவரி 2016 ல் இருந்து பஞ்சப்படி உயர்வு போன்றவை வழங்கப்பட வில்லை. மண்டலங்கள், மாவட்டங்கள் வாரியாக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். ஏனைய துறைகள் போன்று போக்குவரத்து கழகங்களுக்கும் வரவுக்கும், செலவுக்கும் இடையே ஏற்படும் பற்றாக்குறையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்