SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டுகொள்ளாத பேரூராட்சி பொறியியல் துறை அதிகாரிகள் பூதாகரமாக உருவெடுக்கும் குடி தண்ணீர் பிரச்னை

6/19/2019 5:15:26 AM

தேனி, ஜூன் 19: தேனி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து வருவதை தொடர்ந்து, எந்தெந்த கிராமங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதனை தீர்க்க என்ன செய்யலாம். குடிநீர் ஆதாரங்கள் அருகில் உள்ளதா? அதிலிருந்து குடிநீர் விநியோகிக்க என்ன செலவாகும் என்ற பட்டியலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் தயாரித்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள், 607 கிராமங்கள் உள்ளன. இதில் 350க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. சில கிராமங்களில் 10 நாட்கள் முதல் 20 நாட்கள் கூட குடிநீர் சப்ளை இல்லை. முல்லைப்பெரியாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, வைகை நதி சண்முகாநதி, சுருளியாறு என மாவட்டத்தின் ஒட்டுமொத்த நீராதாரமும் வறண்டு உள்ளது. ஆண்டிபட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களில் புதிதாக ஆயிரம் அடிக்கு மேல் போர்வெல் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்த பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து வருவதால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகமும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களிடம் குடிநீர் பிரச்னையின் உண்மைத்தன்மை என்ன என்ற பட்டியல் தயாரிக்குமாறு இந்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எக்காரணம் கொண்டும் அதிகாரிகளை திருப்திப்படுத்த தவறான தகவல் தந்து விடக்கூடாது. மக்களின் உண்மை நிலை என்னவோ அதனை அறிக்கையாக தர வேண்டும். அதில் எந்தெந்த கிராமங்களில் குடிநீர்் பிரச்னை கடுமையாக உள்ளது. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மாற்று குடிநீர் ஆதாரங்கள் எங்கெங்கு உள்ளது. அங்கு குடிநீர் எடுத்து சப்ளை செய்ய எவ்வளவு செலவாகும். அது எந்த அளவு சாத்தியம் என்பது உட்பட விரிவான அறிக்கை அனுமப்புமாறு கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஒன்றிய நி ர்வாகங்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

தீர்வுக்கு வழி தேடும் ஒன்றிய நிர்வாகம் கள ஆய்வு மிக அவசியம்
வளர்ச்சி திட்டபணிகள் நடக்கும்போது ஒவ்வொரு மாதமும் எந்தமாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதை கலெக்டர் முதல் பேரூராட்சிகளில் உள்ள அதிகாரிகள் வரை பார்வையிட வேண்டும். ஆனால் இங்கோ காண்ட்ராக்ட் விட்டதோடு சரி மிக மோசமான மந்த கதியில் பணிகள் நடக்கிறது. புகார்கள் சென்றாலும் களத்திற்கு பேரூராட்சிகளின் பொறியியல் துறை செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்