SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழிப்பறைகள் பராமரிப்பில்லை கம்பம் நகராட்சி திறந்தவெளி கழிப்பறையாக மாறும் அவலம்

6/19/2019 5:15:06 AM

கம்பம், ஜூன் 19: கம்பம் நகராட்சியில் பராமரிக்கப்படாத கழிப்பறையால் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகமாகி வருகிறது. மானிய விலையில் கழிப்பறை கட்டும் திட்டம் குறித்து பிரசாரம் செய்ய நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கம்பம் நகராட்சி வளர்ந்து வரும் நகராக உள்ளது. 33 வார்டுகளில் விரிந்து பரந்த தெருக்கள் உள்ளன. கம்பம் மெட்டில் தொடங்கி, சுப்பிரமணியகோவில் தெரு, தாத்தப்பன்குளம், வடக்குப்பட்டி, வேளாளர்தெரு என நீண்டு செல்கிறது. அதிகமான கூலித்தொழிலாளர்கள் வசிப்பதால் தமிழக அரசு வீடு வீடாக கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறைகளை கட்டாயமாக கட்டுவதற்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதனை நகராட்சி அதிகாரிகள் குழுவினர் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து கழிப்பறை கட்டாதவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நகராட்சி நிர்வாகமோ செயல்படாமல் உள்ளது. குறிப்பாக நகராட்சி கமிஷனர் இல்லாத நிலையில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் தலைமையில் கழிப்பறை கட்டுவதற்கான எந்தவிதமான திட்டங்களும் இன்னும் வகுக்கப்படவில்லை. கழிப்பறை இல்லாத வீடுகள் என பட்டியலிட்டும் மானிய விலையில் கழிப்பறை கட்டுவதற்கு எந்த பரிந்துரை நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இதனால் கம்பம் நகராட்சியில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நகரில் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. ஒவ்வொரு வார்டிலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் உள்ளதால் தொற்றுநோய்கள் அதிகம் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. கம்பம் நகராட்சியில் கழிப்பறை கட்டும் திட்டம் முடங்கி உள்ளதை தேனி மாவட்ட கலெக்டரும் கண்டும், காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கழிப்பறை கட்டுவதற்கு மானியங்கள் தருவதற்கு பரிந்துரைகள் உள்ளன. இதனை நகராட்சி அதிகாரிகள் உரிய விதத்தில் பிரசாரம் செய்யவில்லை. இதனால் திறந்தவெளி இடங்கள் கழிப்பறையாக மாற்றப்படுகின்றன. தொற்றுநோய்களை நகராட்சி நிர்வாகமே விலை கொடுத்து வாங்குவதுபோல் உள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்