பூலாம்பட்டியில் ₹25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
6/19/2019 4:49:12 AM
இடைப்பாடி, ஜூன் 19: பூலாம்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று ₹25 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டியில், திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 1000 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இந்த பருத்தியை கொள்முதல் செய்ய சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹4,800 முதல் ₹5,409வரையும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1000 மூட்டை பருத்தி ₹25 லட்சத்துக்கு ஏலம் போனது.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி
விளை நிலங்களில் ஏரி நீர் புகுந்த விவகாரம் விவசாயிகள் மோதல் முடிவுக்கு வந்தது
கெங்கவல்லி அருகே மலைகிராமத்தில் சாலை அமைக்க நிலம் அளவீடு
கெங்கவல்லி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது
உள்ளாட்சி தேர்தலுக்கு 4வது நாளில் 831 பேர் வேட்புமனு தாக்கல்
ஊரக உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது