SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்உலர் தளம் அமைக்கப்படுமா?

6/19/2019 4:20:52 AM

மணமேல்குடி, ஜூன் 19: கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்களை காய வைக்க உலர்தளம் இல்லாததால் மணலில் காய வைக்கின்றனர். எனவே இப்பகுதிகளில் உடனடியாக மீன்பிடி உலர்தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மீன்கள் மற்றும் இறால்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் லாரி மற்றும் சரக்கு ஆட்டோவில் வந்து வாங்கிச் செல்கின்றனர்.இதேபோல ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவர்கள் மீன்கள், நண்டுகள், இறால்கள் போன்றவற்றை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

விசைப்படகில் வரக்கூடிய இறால் மற்றும் பெரிய வகை மீன்கள் அனைத்தும் விற்பனையாகின்றன. மீனவர்களின் வலையில் சிக்கும் டன் கணக்கில் உள்ள சிறிய வகையான மீன்கள் கடலோர பகுதிகளில் காயவைக்கப்பட்டு கருவாடாக பயன்படுத்தப்படுகிறது. இப்படி காய வைக்கப்படும் மீன்களுக்கு என்று தனியாக உலர்தளம் இல்லாததால் கடலோர பகுதிகளில் உள்ள தரைப்பகுதிகளிலும் மற்றும் மணல் பகுதிகளிலும் காய வைக்கின்றனர். இதனால் பல நேரங்களில் கடுமையான காற்றினால் மணல் ஒட்டிக்கொள்கிறது. மழை நேரங்களில் தரையானது சேறும், சகதியாக மாறுகிறது. மழை நேரங்களில் காய வைக்கும்போது மழையில் நனைந்து வீணாகிறது.இதனால் மீனவர்களுக்கு பல ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த பகுதிகளில் மீன்களை காயவைக்க உலர்தளம் ஏற்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்