SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தம்பதி மர்ம மரணம்: கொலையா? போலீஸ் விசாரணை

6/18/2019 12:31:00 AM

பெரம்பூர், ஜூன் 18: ஓட்டேரி அருகே வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தம்பதியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (41). பால் வியாபாரி. இவருடைய மனைவி தீபா (36). இவர்களது மகன் லோகேஷ் (16), தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். தன்ராஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடித்து லோகேஷ் வீட்டுக்கு வந்தபோது, தாயும், தந்தையும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரிடம் கூறி அழுதான். தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையால் இருவரும் சேர்ந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது மனைவியை அடித்து தூக்கில் தொங்கவிட்டு, அவரும் தூக்குப் போட்டுக் கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்