SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

₹6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

6/14/2019 1:56:59 AM

நாமக்கல், ஜூன் 14: ₹6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில், 4 மாதங்களுக்கு ஓரு முறை ₹2000 வீதம் ஆண்டுக்கு ₹6000- வழங்கப்படும்.

அதன்படி, தகுதியுள்ள சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். முதற்கட்டமாக சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருந்தவர், ஆண்டுக்கு ₹6000 நிதி உதவியை 4 மாதங்களுக்கு ஒரு முறை ₹2000 வீதம்  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 69,333 சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர். நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும், கிராம நிர்வாக அலுவலரிடம் பட்டா, சிட்டா, ஆதார் எண், வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை(ஸ்மார்ட்கார்டு) பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
 
வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், தாசில்தாரை அணுகி விண்ணப்பம் அளித்து வரும் 25ம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து இத்திட்டத்தில் பங்குபெறலாம். இதற்கென தற்போது வட்ட மற்றும் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்