SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் ஓராண்டு நீட்தேர்வு பயிற்சி

6/14/2019 1:56:29 AM

நாமக்கல், ஜூன் 14: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் ஓராண்டு நீட்தேர்வுக்கான பயிற்சி இன்று(14ம் தேதி) துவங்குகிறது. இதுகுறித்து நாமக்கல் குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தேவியண்ணன் கூறியதாவது: நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஓராண்டு நீட்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று(14ம்தேதி) துவங்குகிறது. ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், நீட் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி எண்ணற்ற வெற்றியாளர்களை உருவாக்கிய ஆசிரியர்களை கொண்டு, நீட் முழு நேர பாடவகுப்புகள் தமிழ், ஆங்கில வழியில் தினமும் நடைபெறுகிறது.

2019 நீட்தேர்வில் 375 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு, பயிற்சியில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. தமிழ்வழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் வழியில் பயிற்சி மற்றும் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. பிளஸ்2 பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்கள் மற்றும் பிளஸ்2 சிபிஎஸ்இ தேர்வில் 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு, பயிற்சி கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தேவியண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்