SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்தூர் அருகே வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது; 55 பவுன் பறிமுதல்

6/14/2019 1:51:00 AM

போச்சம்பள்ளி, ஜூன் 14:  மத்தூர் அருகே வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர், வாகன சோதனையின் போது சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், 55 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகத்தில், பல்வேறு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றனர். இதனை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் அந்தந்த காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் மேற்பார்வையில், மத்தூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் எஸ்ஐ ரவி, எஸ்எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மத்தூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

தொடர் விசாரணையில் அந்த நபர், போச்சம்பள்ளி அடுத்த புளியாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த அய்யப்பன் (35) என்பதும் மத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து இருப்பதும் தெரிந்தது. மேலும், அவர் மீது ஊத்தங்கரை காவல் நிலையத்தில் 3 வழக்கும், மத்தூரில் 3 வழக்கும், கல்லாவியில் 2 வழக்கும், சாமல்பட்டி காவல்நிலையத்தில் 1 வழக்கும் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 55 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும், தொடர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவங்கள் குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்