SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்றுநர் தெரபிஸ்ட்டுகளுக்கு பயிற்சி

6/14/2019 1:50:32 AM

கிருஷ்ணகிரி, ஜூன் 14: கிருஷ்ணகிரியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள், தெரபிஸ்ட்டுகளுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியினை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்து, டேப்லெட்களை வழங்கி பேசுகையில், ‘விகாஸ், கவி மிடிஎஸ், ஆட்டிஸ்ம் ஸ்பீச் இசட், இயரிங் 2, பேபி டச் சவுண்ட், இந்தியன் சைன், ஏபிசிடி கிட்ஸ், மழலை தமிழ் ஆல்பாபெட், ஐஎஸ்எல் டிக்ஸ்னரி தமிழ், ஜெல்லோ சன்யூனிக்கேட்டர் போன்ற செயலிகளை கூகுல் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, டேப்லெட் வாயிலாக ஆட்டிஸம், மனவளர்ச்சி குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மூளை முடக்கு வாதம், பார்வை குறைபாடு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்றுத்தர வேண்டும்.

புலன் ஒருங்கிணைப்பு, ஒலி வேறுபாடு, உறவு முறைகள், உடல் பாகங்கள், பழங்கள், விலங்குகள் ஆகியவை குறித்து செயலி மூலம் எளிதாக கற்றுத்தர முடியும்,’ என்றார். இந்த பயிற்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பயிற்றுநர்கள், தெரபிஸ்ட்டுகள் என 52 பேர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்