SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு கலைக்கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு

6/14/2019 1:50:22 AM

கிருஷ்ணகிரி, ஜூன் 14:  கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில், வருகிற 18ம் தேதி காலை 10 மணிக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 19ம் தேதி காலை 10 மணிக்கு பி.காம்., வணிகவியல், பிபிஏ., வணிக நிர்வாகவியல், பி.ஏ.,வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 20ம் தேதி காலை 10 மணிக்கு பி.ஏ., தமிழ்., பி.லிட்., தமிழ் மற்றும் பி.ஏ., ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்று விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம். கலந்தாய்விற்கு வரும் மாணவ, மாணவியர் பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் பெற்றோருடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

  • EcuadoranProtest2k19

    பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்