SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வறட்சியால் காய்ந்த பயிர்களுக்கு இழப்பீடு

6/14/2019 1:45:30 AM

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 14:  பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த ஜமாபந்தியில், வறட்சியால் காய்ந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முதல் தொடங்கியது. இந்நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். வருவாய் கிராமங்களுக்கான கணக்குகள் பார்க்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அந்த மனுக்களை பெற்று விசாரணை செய்த கலெக்டர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர், மாவட்டத்தில் காய்ந்துவிட்ட தென்னை பாக்கு, சப்போட்டா, வாழை, மா உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். சிறு தானிய வகைகளான, கேழ்வரகு, ராகி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர், காப்பீடு செய்தவர்களுக்கு ஒரு சில நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், வறட்சியில் காய்ந்துபோன மரங்களுக்கு கணக்கீடு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு 2 வாரங்களில் நிவாரணம் வழங்கப்படும் என கூறினார். இதில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரும் 18ம் தேதி பொம்மிடியிலும், 19ம் தேதி கடத்தூரிலும், 20ம் தேதி தென்கரைக்கோட்டை பகுதியிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

இதேபோல் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், சப் கலெக்டர் சிவனருள் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் தாசில்தார் இளஞ்செழியன், கலைசெல்வி, சுப்ரமணி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதே போல் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி நடந்தது.

காரிமங்கலம்: காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோவிந்தன் மனுக்களை பெற்றார். தாசில்தார் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். இதில் காரிமங்கலம், பெரியாம்பட்டி பிர்காவை சேர்ந்தவர்களிடம் இருந்து 69 மனுக்கள்
பெறப்பட்டது. வரும் 18, 19ம் தேதிகளில் ஜமாபந்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் கேசவமூர்த்தி, வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

  • isisterrorbabies

    ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

  • 19-11-2019

    19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்