SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மோசடி பங்குதாரர் மீது வழக்கு

6/12/2019 6:52:56 AM

கோவை, ஜூன்.12:  கோவை ஆர்.எஸ். புரத்தில் பொன்முடி(32) என்பவருக்கு சொந்தமான ஆன்லைன் வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கம், வெள்ளி, அலுமினியம்,  காப்பர் போன்ற பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவர் ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகார் மனுவில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் எங்களது நிறுவனத்தில் வியாபார பங்குதாரராக சேர்ந்தார். சப்-புரோக்க ராகவும் செயல்பட்டு வந்தார். எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர் கணேஷ் என்பவரிடம், எங்கள் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.20 லட்சத்தை கண்ணன் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்று தெரிவித்து இருந்தார்.  இது தொடர்பாக போலீசார் கண்ணன் மீது மோசடி வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி கோவை குறிச்சி குளம் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி நேற்று துவங்கியது. இதில், குறிச்சி குளம் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகளுடன் கோவை மக்கள் அறக்கட்டளை நிறுவனர் ஜேபி சண்முகம் பங்கேற்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்