SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்

6/12/2019 6:52:47 AM

கோவை ,ஜூன் 12:  கோவை தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் (சமூக பாதுகாப்பு திட்டம்) விடுத்துள்ள அறிவிப்பு: கோவை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) பதிவு பெற்ற தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்கவேண்டும் என்று தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். எனவே தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கோவை மாவட்ட தொழிலாளர்களில் இதுவரை ஆதார் எண் இணைக்காதவர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை வரும் 12-ம் தேதிக்குள் இராமநாதபுரம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் இயங்கிவரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  பொள்ளாச்சி, வடக்கிபாளையம் பஞ்சாயத்து யூனியன் அலுவகத்திலும், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திலும், கருமத்தம்பட்டி அவினாசி சாலையில் உள்ள பேரூராட்சி மண்டபத்திலும் வரும் 12ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. உறுப்பினர்கள் இச்சிறப்பு முகாமில் உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை 0422-2324988 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்