SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் முறையற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்

6/11/2019 5:19:15 AM

சேலம், ஜூன் 11: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, உள்ளாட்சித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்து, கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: மாவட்டம் முழுவதும் தற்போது நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு, அனைத்து பகுதி மக்களுக்கும் தவறாமல் குறித்த கால இடைவெளியில், உரிய முன்னறிவிப்புடன் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு, இனி வாரத்திற்கு 2 நாட்கள் குடிநீர் வழங்க உள்ளாட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுவதாலும், சொந்த ஆதாரங்களிலிருந்து எடுக்கப்படும் நீர் குறைந்து விட்டதாலும், பொது குழாய்களில் வழங்கப்படும் நீரின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்துள்ளது. அதனால் உள்ளாட்சி அமைப்புகள், உரிய முறையில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், பருவமழை குறைந்துள்ளதாலும், காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து குறைந்துள்ளதாலும், விநியோகிக்கப்படும் குடிநீரை, மக்கள் சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுதல், பெரிய அளவிலான தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி பெருமளவு நீரை தேக்கி வைத்தல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

குடிநீரை முறையற்ற வகையில் பயன்படுத்தும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். முறையற்ற குடிநீர் இணைப்புகள், வீடுகளிலோ, தொழிற்சாலைகளிலோ, உணவு விடுதிகளிலோ, வணிக நிறுவனங்களிலோ இருப்பது கண்டறியப்பட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் குழாய்களில் இருந்து, உரிய முன் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள இணைப்புகளை அகற்றவும், விதிகளுக்கு முரணாக உள்ள இணைப்புகள், மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் நிலை போன்றவற்றை கண்காணித்து அகற்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பணியை சரிவர செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்