SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடமாற்றம் செய்த ஆசிரியரை மீண்டும் நியமிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பள்ளி மாணவர்கள்

6/11/2019 5:19:00 AM

ேசலம், ஜூன் 11:  சேலம் அருகே இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் நியமிக்க கோரி, பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தும்பிப்பாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது தங்களது ஆசிரியரை மாற்று பள்ளிக்கு இடமாற்றம் செய்து விட்டனர் எனவும் அவரை தங்களது பள்ளியிலேயே மீண்டும் நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை மனு அளிக்க அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள்  கலெக்டரிடம் மனு அளித்தனர்.  அந்த மனுவில், தும்பிப் பாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பெற்றோர் கழக தலைவரும்,  பள்ளி தலைமை ஆசிரியரும் சேர்ந்து பல்வேறு விதிமுறைகளை மீறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பள்ளியில் நல்லமுறையில் பணியாற்றி வந்த ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளனர். எனவே அவரை மீண்டும் எங்களது பள்ளியில் நியமிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், ‘‘அன்புமணி என்ற ஆசிரியர் நல்லமுறையில் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். அவரை இடமாற்றம் செய்து விட்டனர். அவரை மீண்டும் எங்களது பள்ளிக்கு நியமிக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளிக்கு செல்லமாட்டோம்,’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்