SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்போன் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது

6/11/2019 4:23:27 AM

சென்னை: வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் பகுதியில் ஐ.டி. நிறுவன ஊழியர்களை குறிவைத்து, விலை உயர்ந்த செல்போன்களை திருடி வந்த, திருப்போரூர் அடுத்த கொட்டமேடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (24), இவரது தம்பி நாகராஜ் (21) மற்றும்  17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 செல்போன்களை மீட்டனர். இவற்றின் மதிப்பு ₹3 லட்சம். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மணிகண்டன், நாகராஜை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.    

* சூளைமேடு லோகநாதன் நகர் 2வது தெருவை ேசர்ந்த நீது (38) என்பவர் நேற்று முன்தினம் வீட்டின் முன் நிறுத்திய மொபட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் விசாரிக்கின்றனர்.
* சைதாப்ேபட்டையை சேர்ந்த கோபி என்பவரின் மகள் கவிதா (26), பி.காம் பட்டாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, மாப்பிள்ளை பார்த்தனர். ஆனால், கவிதாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவிதா தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
* வேளச்சேரி பாலாஜி காலனியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டாக குழந்தை இல்லை. இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த அஜித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* அமைந்தகரை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கோயம்பேடு பகுதியை சேர்ந்த தீபக்குமார் (22) மற்றும் வினோத்குமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரை ேசர்ந்த செல்வராஜ் (40), நேற்று முன்தினம் இரவு சந்தோம் தேவாலயத்திற்கு வந்து தனது பைக்கை நிறுத்திவிட்டு வழிபாடு செய்ய சென்றார். அப்போது, அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.  
* ராயப்பேட்டை மாவடி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (25) என்பவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியபோது, நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் ₹3 ஆயிரம் மற்றும் செல்போனை திருடி சென்றனர். அதேபோல், அருகில் உள்ள ராஜேந்திரன் (44) என்பவரின் வீட்டிலும் ₹4 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் திருடு போனது.
* திருவொற்றியூர் சிவகங்கைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (21). இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வந்தார். அப்போது,  அங்கு பக்கத்து தெருவைச் சேர்ந்த மகேஷ் (36), பிரகாஷ் (21) மதன் (26), ஆகியோர் குடிப்போதையில் ரகளை செய்தனர். இதை கார்த்திக் தட்டிக் கேட்டதால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் கார்த்திக் காயமடைந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ், பிரகாஷ், மதன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

 • 17-06-2019

  17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்