SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் தேவையற்ற இலவச திட்டங்களை கைவிட வேண்டும்

6/11/2019 4:23:20 AM

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பாடுபட்ட மாநில, மாவட்ட, மண்டல இணைஞர் அணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம், மக்கள் தேசிய கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாநில தலைவர் சேம.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வரலாறு காணாத வெற்றிபெற்று தந்த திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தமிழக வாக்காளர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். மத்தியில் ஆளும் பாஜ அரசு, தமிழக மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் வளர்ச்சிக்கான திட்டங்களை, நிதி ஆதாரங்களை பிரதமர் மோடி வழங்க வேண்டும்.

தொழிலாளர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு நல வாரியங்களை கலைக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரும் மழை காலங்களில் நீரை சேமிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும். நீர்பாசனத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். நிதி ஆதாரங்களை பெருக்க தேவையற்ற இலவச திட்டங்களை கைவிட வேண்டும்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மழைக்கால நிவாரண நிதிகள் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்ய தேவையான களிமண்ணை அனைத்து மாவட்டங்களிலும் ஏரி, குளங்களில் எடுத்துக்கொள்ள ஒரே மாதிரியான அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்