பவானி வட்டத்தில் ஜமாபந்தி
6/7/2019 5:49:31 AM
பவானி, ஜூன் 7: பவானி வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பவானி தாலுகா அலுவலகத்தில் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் முருகேசன் தலைமையில், சிங்கம்பேட்டை, கேசரிமங்கலம், கல்பாவி, ஒலகடம், குறிச்சி, காடப்பநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைந்தது. இதில் கிராம கணக்குக்குள் தணிக்கை செய்யப்பட்டதோடு, முதியோர் உதவித்தொகை, விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 160க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில், பவானி தாசில்தார் வீரலட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் கிருஷ்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் அதிர்ஷ்டராஜ், தேர்தல் துணை தாசில்தார் ராவுத்தா கவுண்டர், மண்டலத் துணை தாசில்தார் நல்லசாமி, துணை தாசில்தார் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து ஜம்பை, ஒரிச்சேரி, புன்னம், ஆப்பக்கூடல் ஆகிய கிராமங்களுக்கு இன்று (7ம் தேதி) ஜமாபந்தி நடைபெறுகிறது.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 14 ஒன்றியங்களில் 9.08 லட்சம் வாக்காளர்கள்
சிறுமி பாலியல் பலாத்காரம் டிரைவர் போக்சோவில் கைது
போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,184 வழக்கு பதிவு
14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்
மாநகராட்சி பகுதியில் தரமான சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்
தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து