மாமனாரை குத்திய மருமகன் மீது வழக்கு
6/5/2019 2:04:17 AM
பெரியகுளம், ஜூன் 5: பெரியகுளம் அருகே பங்களாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சின்னபொன்னையா(55). அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு தனது மகள் நாகலட்சுமியை திருமணம் முடித்துக்கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நாகலட்சுமி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தந்தையின் வீட்டில் இருந்துள்ளார். தனது மனைவியை கூப்பிடுவதற்காக மாமனாரின் வீட்டிற்கு சென்ற ராமகிருஷ்ணன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மாமனாரை அசிங்கமாக பேசி கையால் அடித்தும், கத்தியால் குத்தியும் காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த சின்னபொன்னையா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னபொன்னையா கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
‘செல்போன் பார்க்காதே’ தாய் கண்டிப்பால் மகன் தீக்குளிப்பு வேடசந்தூரில் பரபரப்பு
நத்தம் கரந்தமலை கிராமங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல திடீர் தடை
திண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு பேருந்து
மாவட்ட இறகுபந்து பழநி அக்சயா பள்ளி வெற்றி
ஒட்டன்சத்திரத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு
நத்தம் வேம்பரளி பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை