SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்தங்கல்லை சேர்ந்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது; 3 பேருக்கு வலை

5/25/2019 6:24:02 AM

சிவகாசி, மே 25: சிவகாசி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சிவகாசி அருகே சத்யா நகரைச் சேர்ந்தவர் பொட்டுக்கடலை(எ)ராஜ்குமார் மகன் செல்வகணேஷ்(23). இவர் மீது திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 17 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் திருத்தங்கல் எஸ்.ஆர்.என்.எம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செப்டிக் டேங்கில் வெட்டுக் காயங்களுடன் செல்வகணேஷ் பிணமாக கிடந்தார். கடந்த 22ம் தேதி செல்வகணேஷ் உடலை பிரேதமாக திருத்தங்கல் போலீசார் மீட்டு கொலையாளியை தேடி வந்தனர். செல்வகணேசின் தந்தையை 10 வருடங்களுக்கு முன்பு ஆணைக்குட்டத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் கொலை செய்துள்ளார். அவரிடம்
செல்வகணேஷ் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என சமீபத்தில் மிரட்டியுள்ளார்.

எனவே செல்வகணேஷை தீர்த்துக்கட்ட முத்துக்கிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். அதனை தொடர்ந்து முத்துக்கிருஷ்ணன், முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த பாலு, ஆலாவூரணியை சேர்ந்த கார்த்தி, பெருமாள் கோயில் நகரை சேர்ந்த சூர்யா, திருத்தங்கல்லை சேர்ந்த சம்சா ஆகியோர் கொலை செய்தனர் என செல்வகணேஷின் சகோதரர் காளீஸ்வரன் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். முத்துக்கிருஷ்ணன், சூர்யாவை போலீசார் கைது செய்தனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்