SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசுமை உரக்குடிலில் உரம் தயாரிப்பு துவக்கம்

5/25/2019 3:26:45 AM

உடுமலை,மே25: உடுமலை நகராட்சியில் தினசரி சேகரமாகும் திடக்கழிவுகள், பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் கடந்த 12 ஆண்டுகளாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு பணிகளை மேம்படுத்தும் வகையில், நகராட்சி உரக்கிடங்கில் உள்ள பழைய கழிவுகள் பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளில், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க நகராட்சி பகுதியில் 3 பசுமை உரக்குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ராஜேந்திரா சாலையில் உள்ள பசுமை உரக்குடில் முழுமையாக பணி முடிந்ததால், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை நகராட்சி ஆணையர் ராஜாராம், கடந்த 22ம் தேதி துவக்கி வைத்தார். ‘விரைவில் அனைத்து உரக்குடில்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இந்த உரக்குடில் மூலமாக மக்கும் குப்பை, இயற்கை உரங்களாக தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் ஜான்பிரபு, நகர்நல அலுவலர் (பொ) சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், செல்வகுமார், ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்