SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தேர்தலில் வெற்றி திமுக, கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம்

5/25/2019 1:23:50 AM

தென்காசி, மே 25:  தென்காசி மேலகரம் பேரூந்து நிறுத்தம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஜீவானந்தம், யாகவா சுந்தர், மாவட்ட பிரதிநிதி சம்முகுட்டி, ஒன்றிய பிரதிநிதி கல்யாணி, சந்திரன், ஈஸ்வரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ்சரவணார், பாலு, சிங்கத்துரை,  ஆத்தியப்பன், பாலசுப்பிரமணியன், வீரபுத்திரன், விசுவநாத், விக்னேஷ், சாமி, பரமசிவன், தங்கம், கோபால், காளிராஜ், தனபால், ராஜன், பால்ராஜ், காஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் வெற்றியையும் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை வரவேற்று தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தென்காசி கோபுரவாசல் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் டேனிஅருள்சிங் தலைமை வகித்து இனிப்பு வழங்கினார்.  மாவட்ட துணை செயலாளர் சித்திக், கடையநல்லூர் சட்டமன்ற செயலாளர் ஜாண்தாமஸ், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், மூர்த்தி, மணிகண்டன், எட்டப்பன், ரமேஷ், நகர செயலாளர்கள் பாக்கியநாதன், தீபன்ராஜ், பால், உதயா, ஜித்தின், அலார்ட், பீர், சேக், பசுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ராதாபுரம்:  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் மக்களவை தொகுதியில்  வெற்றி பெற்றார். இதையடுத்து  ராதாபுரம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ராதாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் அருந்தமிழ் செல்வன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் முனிஸ்வரன், ஊராட்சி கழக செயலாளர் நரேஷ் மற்றும் சரவணன், மாதவன், முருகன், ராபின், இருதயராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடையம்:  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி வெற்றி பெற்றார். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், கேரளாவில் மலப்புரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் குஞ்ஞாலி குட்டி,  பொண்ணானி தொகுதி வேட்பாளர் பஷீர் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மேற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் முதலியார்பட்டி  அப்துல்காதர் தலைமையில், ரவணசமுத்திரத்தில் கொடியேற்று நிகழ்ச்சி, மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ரவணசமுத்திரம் ஹனபி பள்ளிவாசல் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நெல்லை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எம். ஷாஹுல் ஹமீது கொடியேற்றினார். ரவணசமுத்திரம் பிரைமரி செயலாளர் இக்பால், துணைத்தலைவர் பிச்சை ஹாஜியாா், கவுரவ ஆலோசகர்கள், அப்போலோ ரிபாய், இஸ்மாயில், ஆதம் ஹாஜியார் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி பொருளாளர் தமீம் அன்சாரி வரவேற்றார்.

ஆலங்குளம் தொகுதி இளைஞரணி தலைவர் துணைச்செயலாளர் ஷேக் மீரான், மாணவரணி தலைவர் உஸ்மான் கனி, கடையம் ஒன்றிய இளைஞரணி பொருளாளர் இம்தாத்ஷா, முஸம்மில், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்:  கடையநல்லூரில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழகம் முழுவதும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றதையும், ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றி பெற்றதையும் வரவேற்று முஸ்லிம் லீக் கட்சியினர் நேற்று இரவு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் செய்யது மசூது தலைமை வகித்தார். நகர செயலாளர் அப்துல்லத்தீப், இளைஞர் லீக் மாநில துணைத்தலைவர் ஹபிபுல்லா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இக்பால், ஹைதர்அலி, ஹனிபா, அயூப்கான், சேக்அப்துல்காதர், மசூது, முகம்மது, மஜீத், ரகுமத்துல்லா, கோதரி, காஜாமைதீன், இஸ்மாயில், சேகனா, முஸ்தபா, பாரூக் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2019

  14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்