SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குன்னூர், பர்லியாரில் ஸ்பெயின் பிளம்ஸ் விற்பனை ஜோர்

5/23/2019 7:45:13 AM

குன்னூர், மே 23:  குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பேரி, பிளம்ஸ், சீதா, மங்குஸ்தான், ஸ்ட்ராபெர்ரி, துரியன் உட்பட பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இதில், பொதுவாக நீலகிரியில் ரூபி பிளம்ஸ் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தற்போது, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளம்ஸ் பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், தற்போது, ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளம்ஸ் பழம் குன்னூர், பர்லியார் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
‘‘ஸ்பெயின் நாட்டின் இந்த வகை பிளம்ஸ் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிக இனிப்பு சுவை கொண்ட இந்த பழங்கள் தற்போது ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை பிளம்ஸ் நாற்றுக்களை நீலகிரியில் வளர்க்க தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டுமென விவசாயிகள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்