SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலாளியை கரடி தாக்கியதாக வாட்ஸ் ஆப் வதந்தியால் பரபரப்பு

5/23/2019 7:09:33 AM

மஞ்சூர், மே 23:  தொழிலாளியை தாக்கிய கரடியை பொதுமக்கள் அடித்து கொன்றதாக வாட்ஸ் ஆப்பில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.மஞ்சூர் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை கரடி கடுமையாக தாக்கியதில் படுகாயத்துடன முகம், கை, கால்களில் ரத்தம் கசிவது போலவும் மற்றும் தொழிலாளியை கடித்த கரடியை பொதுமக்கள் சிலர் அடித்து கொன்று போட்டதாக படங்கள் நேற்று முன்தினம் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதலங்களில் வெளியானது.

சம்பவம் நடந்த இடம் மஞ்சூர் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மஞ்சூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை நேரில் கண்டது போல் ஆளாளுக்கு தகவல் பரிமாறியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் குறித்து விசாரனை நடத்தினார்கள். இறுதியில் வாட்ஸ் ஆப் தகவல் மாவட்டத்தில் எங்கும் நடைபெறவில்லை என தெரியவந்ததை தொடர்ந்து பரபரப்பு அடங்கியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்