SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனாட்சி அம்மன் கோயிலில்

5/23/2019 6:02:13 AM

மதுரை, மே 23: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செல்போன் பாதுகாப்பு கட்டணத்திற்கு, கணினி மூலம் பில் கொடுக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், கடந்தாண்டு பிப்.2 இரவில் கிழக்கு கோபுர வாசலில் ஏற்பட்ட தீயில், கடைகள் மற்றும் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்நிலையில், கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் நான்கு கோபுர வாசல்களில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க அறைகள் அமைக்கப்பட்டு, செல்போன் ஒன்றுக்கு பாதுகாப்பு கட்டணமாக ரூ.10 வசூலித்து வருகின்றனர்.

இதற்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தெற்கு கோபுரம் வழியாக அதிக பக்தர்கள் வருகை தருவதால், அங்கு மட்டும் கோயில் நிர்வாகம் கணினி மூலம் பில் வழங்கி வருகின்றது. இதனால், நெரிசல் இல்லாமல் பக்தர்கள் செல்போன்களை கொடுத்து டோக்கன் பெற்றுச் செல்கின்றனர். இது பக்தர்களுக்கு வசதியாக உள்ளது. மேலும், காத்திருக்க தேவையில்லை. இதேபோல, அனைத்து கோபுர வாசல்களிலும் கணினி பில் முறையை கொண்டு வரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலத்தை சேர்ந்த கணேசன் கூறுகையில், ‘மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய வந்தோம். செல்போன்களுடன் கோயிலுக்குள் செல்ல முயன்றபோது, போலீசார் தடுத்தனர். செல்போன்களை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு வருமாறு கூறினர். இதனால், மீண்டும் வரிசையில் நின்று செல்போன்களை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு டோக்கன் வாங்கி சென்றோம். பில்களை கையில் எழுதி கொடுக்கின்றனர். இதில், கூடுதல் கட்டணம் உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன. கோயில் நிர்வாகம் அனைத்து பகுதியிலும் கணினி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் செல்போன்களை கோபுர வாசல் அருகே பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு சென்று வரலாம் என்ற தகவல் பலகை முக்கிய இடங்களில் வைக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்