SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கணினி பில் கொடுக்க வலியுறுத்தல் கிரானைட் வழக்குகள் ஒத்திவைப்பு

5/23/2019 6:02:00 AM

மேலூர், மே 23: மேலூர் பகுதியில், அரசு புறம்போக்கு நிலங்களில் அடுக்கி வைத்திருந்த கிரானைட் கற்களை அரசுடமையாக்ககோரிய வழக்குகள் உள்ளிட்ட 43 வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலூர் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் அடுக்கி வைத்திருந்த கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி, அப்போதைய கலெக்டர் தொடர்ந்த வழக்குகளில், பிஆர்பி கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட மற்ற கிரானைட் நிறுவனங்கள் சேர்த்து மொத்தம் 34 வழக்குகள் நேற்று முதலில் விசாரணைக்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து பிஆர்பி கிரானைட் நிறுவனம் மற்றும் தனிநபர் மீது போலீசார் தொடர்ந்த 8 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இத்துடன் பிஆர்பி நிறுவனம் தங்களது வாகனங்களின் ஆர்சி புத்தகத்தை ஒப்படைக்க கோரிய ஒரு மனுவும் விசாரணைக்கு வந்தது. இதில், கலெக்டர் தொடர்ந்த 34 வழக்குகளில் 15 வழக்குகள் ஜூன் 19க்கும், 19 வழக்குகள் ஜூலை 10க்கும் ஒத்திவைக்கப்பட்டன. இதே போல் போலீசார் தொடர்ந்த 8 வழக்குகள் ஜூலை 10க்கும், ஆர்சி புத்தகம் வேண்டி தொடரப்பட்ட வழக்கை ஜூன் 12க்கும் ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் பழனிவேல் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது மதுரை சின்ன அனுப்பானடியைச் சேர்ந்த மாரிமுத்து (22), கீரைத்துறையைச் சேர்ந்த வெற்றிச்செல்வம் (22) ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் பொது அமைதிக்கு குந்தகமான வகையில் செயல்பட்டதாக கூறி, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் இருவரையும் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்ற 4 பேர் கைது மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில், தத்தனேரி செந்தில்குமார் (39), பாலசுமன்ராஜ் (30), தமிழ்செல்வி (46) ஆகியோர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தமிழ்செல்வி உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல உசிலம்பட்டி அருகே, லிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்வர்கள் நாட்டாமை (60), செல்வம் (45). இவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் அவர்களிடமிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1250 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாட்டாமையை கைது செய்தனர். செல்வம் தப்பியோடினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ விபத்தில் 3 பேர் காயம்
மேலூர் அருகே, திருவாதவூரில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. கவுதம் என்பவர் ஓட்டி வந்தார். தெற்குப்பட்டி அருகே, ஷேர் ஆட்டோ மீது எதிரே வந்த டூவீலர் கவிழ்ந்து விபத்து உண்டானது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் கவுதம், ஆட்டோவில் இருந்த சிக்கந்தர், டூவீலரில் வந்த அழகர் என 3 பேர் காயமடைந்தனர். அழகர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்ற 2 பேர் மேலூர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டூவீலர் மோதி ஒருவர் பலி
உசிலம்பட்டி அருகே, கவணம்பட்டியைச் சேர்ந்த சோலைமலை (65), கடந்த 13ம் தேதி உசிலம்பட்டியிலிருந்து வீட்டிற்கு கவணம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, மதுரை அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் இறந்தார். உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குடும்ப பிரச்னையில் தற்கொலை
உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்த மருதுபாண்டி (51), குடும்ப பிரச்னையால், நேற்று முன்தினம் விஷம் குடித்தார். அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்