SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு கூடலூர் - லோயர்கேம்ப் சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்

5/23/2019 5:32:24 AM

கூடலூர். மே. 23: கூடலூரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கூடலூர் - லோயர்கேம்ப் நெடுஞ்சாலையில் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடலூர் அருகே லோயர்கேம்பில் 1955ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. முல்லைப்பெரியாறிலிருந்து வரும் தண்ணீரை தடுப்பணை கட்டி தடுத்துநிறுத்தி, நீரேற்று நிலையம் மூலம் ராட்சத தொட்டிகளில் தேக்கிவைத்து, பின்னர் சுத்திகரிக்கப்பட்டு, லோயர் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் கூடலூர், கம்பம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் கடந்த 2007-08 முதல் புதுப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும் தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை உள்ளடக்கிய மூன்று பேரூராட்சிகள், நான்கு கிராம பஞ்சாயத்துக்களுக்கு ரூ. 8 கோடியே 77 லட்சம் செலவில் இரண்டு புதிய நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு இங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த குடிநீர் கொண்டு செல்லும் மெயின் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி உடைவதும், அதனை குடிநீர் வடிகால் வாரியம் சீரமைப்பதுமாக உள்ளனர்.

இந்நிலையில் கூடலூர் - லோயர் கேம்ப் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ரோட்டு வழியே தண்ணீர் வீணாகி வெளியேறுகிறது. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளபோதும், அணையில் இருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர், குழாய் உடைந்து வீணாகி வெளியேறுவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூட்டுக்குடிநீர் குழாய்களை கண்காணிக்க அலுவலர்களை பணி அமர்த்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரியத்தை வலியுறுத்தி உள்ளனர்.

புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் சுற்றுலா மற்றும் கோயிலுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுருளி அருவி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். அருவி பகுதியில் இரவு நேரம் அடையாளம் தெரியாதவர்களின் நடமாட்டம் இருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் வனவிலங்கு வேட்டை மற்றும் மரம் வெட்ட வருகிறார்களா என்பதை வனத்துறை கண்காணிக்க வேண்டும். சுருளி அருவியில் கடந்த 2011ல் நடந்த காதல் ஜோடி இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளி உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டான். இந்த கொலைக்குற்றவாளி திவாகருக்கு, தேனி அமர்வு நீதிமன்றம் வழங்கிய தூக்குத்தண்டனையை கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது குறிப்பித்தக்கது.

ஆண்டிபட்டியிலும் இதே நிலை தான் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் சூழலில் ஆண்டிபட்டி வைகை அணை ரவுண்டானா பகுதியில் கூட்டுக்குடிநீர் பைப்பு உடைந்து குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. இந்நீரை நம்பியுள்ள குள்ளப்புரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். வைகை அணை வழியாக சென்று வரும் அரசு அதிகாரிகள் குடிநீர் வீணாவதை கண்டுகொள்வதில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ilavarsar_pakisthn111

  பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

 • kavan_manavai11

  அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

 • seuol_expooo1

  தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

 • pumbkin_comp111

  அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

 • bday_day11

  ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்