SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கணவன் இறந்த நிலையில் கடன் தொல்லை அதிகரிப்பு விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடம்

5/23/2019 5:21:45 AM

சென்னை, மே 23: கடன் தொல்லையால் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை போரூர் தாமஸ் தெருவை சேர்ந்தவர் சிபிராஜ் (38). இவரது 2வது மனைவி சைலஜா (29). இவர்களுக்கு லட்சுமி (4) என்ற மகளும், ஆதிதேஷ் (2) என்ற மகனும் இருந்தனர். சிபிராஜ் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் கடன் வாங்கி கொடுக்கும் தொழில்  செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட சிபிராஜ், கிட்னி பழுதடைந்து, மாரடைப்பால் கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார். இதனால் சிகிச்சைக்காகவும், குடும்பத்துக்காகவும் சிபிராஜ் பல இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சைலஜா, 2 குழந்தைகளை மிகுந்த சிரமத்துடன் வளர்த்து வந்தார்.

இதற்கிடையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு சைலஜாவுக்கு நெருக்கடி கொடுத்தாக கூறப்படுகிறது. வருமானமும் இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு வேலைக்கும் செல்ல முடியாமல் சைலஜா மிகவும் கஷ்டத்துடன் இருந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சைலஜா, குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் லட்சுமி, ஆதிதேஷ் ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்னர் சைலஜாவு விஷம் குடித்துள்ளார்.

அந்த நேரத்தில், சிபிராஜ் நண்பர் ஜினைத் என்பவர் கேரளாவில் இருந்து சென்னை வந்தார். சைலாஜாவையும், குழந்தைகளையும் கேரளாவுக்கு அழைத்து செல்ல அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, வீடு உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது குழந்தைகளும், சைலஜாவும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 குழந்தைகளும் இறந்துவிட்டதாக கூறினர். சைலஜா தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்