SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புளியங்குடியில் சாலையின் நடுவே மின் கம்பங்கள்

5/23/2019 12:47:22 AM

புளியங்குடி, மே 23: புளியங்குடியில்  சாலையின் நடுவே காணப்படும் மின் கம்பங்களால் வாகன ஓட்டிகள் மற்றும்  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறப்பதற்கு முன் மின் கம்பங்கள்  அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். புளியங்குடி  நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள். 11வது வார்டு இந்திராநகரில் சுமார் 500  குடியிருப்புகள் உள்ளன. பெரிய தெரு இலந்தைகுளம் அருகேயுள்ள நுழைவுவாயில்  பகுதியில் 2 மின் கம்பங்கள், சாலையின் மைய பகுதியில் காணப் படுகின்றன.  இதனால் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து  நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதேபோல்  திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க பஸ் உள்ளிட்ட வாகனங்களில்  செல்ல நேரிட்டால், வாகனங்கள் தங்கள் பகுதியில் வரமுடியாததால் பொதுமக்கள்  நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக  காணப்படும் மின் கம்பங்களை மாற்ற அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை  எடுக்கவில்லை. முன்பு மக்கள் தொகை மற்றும் வாகன போக்குவரத்துகுறைவு  என்பதால் பெரியஅளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது பெருகிவரும்  மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக  சாலையின் மைய பகுதியில் காணப்படும் 2 மின் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் மாதம்  பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மைய  பகுதியில் காணப்படும் மின் கம்பங்களையும் உடனடியாக அகற்ற அதிகாரிகள் முன்வர  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்