SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹8.80 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை

5/22/2019 2:18:08 AM

திருச்செங்கோடு, மே 22: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று ₹8.80 லட்சத்துக்கு எள் மற்றும் பருத்தி விற்பனையானது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று எள் மற்றும் ஏலம் நடைபெற்றது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் சேர்ந்த விவசாயிகள் 100 மூட்டை எள் மற்றும் 50 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றை கொள்முதல் செய்ய பவானி. அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், கோவை, திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த, சுமார் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். ரகசிய முறையில் எள் டெண்டர் விடப்பட்டது. இதில், கருப்பு எள் கிலோ ₹98 முதல் ₹108.90 வரையும், வெள்ளை எள் கிலோ ₹99.60 முதல் ₹113.20 வரையும், சிகப்பு எள் கிலோ ₹88.80 முதல் ₹109.80 வரையும் விற்பனையானது.

தொடர்ந்து பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,757 முதல் ₹5,983 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 100 மூட்டை எள் ₹8 லட்சத்துக்கும், 50 மூட்டை பருத்தி ₹80 ஆயிரத்துக்குமாக மொத்தம் ₹8.80 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்