SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

5/19/2019 2:52:30 AM

குன்னூர், மே 19 : நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது ஊட்டியில் மலர்கண்காட்சி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை காண பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்கள் குறைவாகவே இயக்கி வருகின்றனர். மேலும், நீலகிரியிலுள்ள கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்படுவதால், கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படுதில்லை. கோவையிலிருந்து ஊட்டிக்கும், ஊட்டியிலிருந்து  கோவைக்கும், குன்னூரிலிருந்து கோவைக்கும் பஸ்கள் குறைவாகவே இயக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளுர் பொதுமக்கள் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கோடை சீசன் கருதி அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்