SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா

5/19/2019 1:14:47 AM

மயிலாடுதுறை, மே 19:  மயிலாடுதுறை  தருமபுரம் ஆதீனத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலில் ஆண்டுபெறுவிழா 11 நாட்கள் நடைபெறும். 11 நாட்களும்  திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடும் நடைபெறும். அதன்படி  ஞானபுரீஸ்வரர் கோயில் ஆண்டுபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் (25ம்  தேதி) வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஞானாம்பிகை சமேத  ஞானபுரீஸ்வரர் விநாயகர், முருகன் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில்  கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் வழிபாடு நடத்தி சிறப்பு பூஜைகள் செய்து குருமகா  சன்னிதானம் முன்னிலையில் காலை 10.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.  இதில் சிவபுரம்வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உட்பட  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் பெருவிழா மற்றும்  திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டில் தினமும் சமயச்சொற்பொழிவு, கருத்தரங்கம்,  சமய பயிற்சி வகுப்பு, திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்