SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளிகளில் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

5/19/2019 1:13:28 AM

வேதாண்யம், மே 19:  வேதாரண்யம் தாலுகாவில் அரசு  மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பாடவாரியாக பணம்  வசூல் நடைபெறுவதாகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ் வழங்கவும் பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு, வேதாரண்யம், தோப்புத்துறை, ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம், தகட்டூர், புஷ்பவனம், வௌ்ளப்பள்ளம், நாகக்குடையான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. ஆண்டு தோறும் இப்பள்ளிகளில் 10 ஆரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேரிய மாணவ, மாணவிகள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் வாங்கி வருகின்றனர்.

இதில் பல்வேறு பள்ளிகளில் கணினி அறிவியல், அறிவியல், உயிரியல், வணகவியல் உள்ளிட்ட பாடபிரிவுகளில் சேருவதற்கு 1000 முதல் 5000 வரை வசூல் நடைபெறுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாற்று சான்றிதழ் பெறவும் பணம் வசூலிக்கப்படுகிறது. அரசு அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து வசதிகளையும் அரசே செய்து கொடுக்கிறது. ஆனால் வசதி செய்து கொடுக்கும் அளவிற்கு மேல்நிலைப்பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை நியமிப்பது இல்லை. பல  மேல்நிலைப்பள்ளிகளில் பல ஆண்டுகளாக பல பாடபிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லாமலே பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமித்து  அவர்களுக்கு ஊதியம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாணவ, மாணவிகளிடம் வசூல் செய்த தொகையிலிருந்து சம்பளத்தை வழங்குகின்றனர். அரசு தனியார் பள்ளிகளின் கட்டண  கொள்ளைகளை தடுக்க அனைத்தும் இலவசமாக வழங்கியும், ஆங்கில கல்வியை இலவசமாக வழங்கி வருகிறது.  ஆனால் போதுமான ஆசிரியர்கள் நியமிக்காததால் பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் இருந்து நன்கொடை வசூல் செய்யும் கட்டாயத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தள்ளப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இருந்த போதிலும் ஆசிரியர் பற்றாக்குறையால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாணவ, மாணவிகளிடம் பணம் வசூல் செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.  

அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி சேருவதற்கும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும் போது, பள்ளி வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்தவும் பல்வேறு பள்ளிகளில் மேல்நிலைபள்ளிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும்   தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்