SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தியாகராஜ சுவாமி கோயிலில் தேரோட்டம்

5/19/2019 1:12:57 AM

கீழ்வேளூர், மே19:  நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூர் நன்மாழியாள் சமேத தியாகராஜ சுவாமி கோயில்  வைகாசி விசாகப் பெருவிழா  கடந்த 8ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 9ம்தேதி கொடிஏற்றமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தினம் தோறும் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது.  12ம் தேதி தியாகராஜார் வசந்த விழா நடைபெற்றது.  முக்கிய நிகழ்ச்சியான திருத் தேர் திருவிழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. கீழ வீதியில் இருந்து தேர் புறப்பட்டு தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கீழ வீதி வந்து சேர்ந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள்,  அப்பர் சுவாமிகள் வழிப்பாட்டு  மன்றம், கிராமவாசிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்