SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரைவர்களுக்குள் முன்விரோதம் 3 வேன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய 3 வாலிபர்கள் கைது நாகை பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு

5/19/2019 1:12:29 AM

கீழ்வேளூர், மே 19:  நாகை பழைய பஸ் நிலையத்தில், டிரைவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தில் 3 வேன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை பழைய பேருந்து நிலையம் அருகே  மறைமலை அடிகளார் வாடகை ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வாடகை கார் மற்றும் வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேப்போல் சொந்த வாகனங்களை வைத்து ஓட்டும் ஓட்டுநர்கள்  கடந்த வாரம்  ரயில் நிலையம் முன் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு மோர் பந்தல் வைக்க பந்தல் அமைத்துள்ளனர். அந்த பந்தலை உடன் பிரிக்காமல்  வைத்திருந்தனர். இது வாடகை  வேன், கார் நிறுத்துவதற்காக இடையூறாக இருந்தது. இதையடுத்து மறைமலை அடிகளார் சங்கத்தின்ர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொட்டகையை அப்புறப்படுத்த கூறியுள்ளனர்.  இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு சில மர்ம நபர்கள் கற்கள், கடப்பாரை, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு பாலகிருஷ்ணன், காளிதாஸ், மகேந்தின் ஆகியோரின் 3 வேன்களின் கண்ணாடிகளை உடைத்தும், வேனில் பயணிகள் அமரும் இருக்கைகளை கிழித்தும், சங்க கொட்டகையின் மேற்கூரையை சேதப்படுத்தியும், சங்க பெயர் பலகையை உடைத்தும் சேதப்படுத்தினர். அதிகாலை வந்த ஓட்டுநர், உரிமையார்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மறைமலை அடிகளார் வாடகை ஓட்டுநர், உரிமையாளர் நல சங்கத்தின்  நிர்வாகிகள் சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர். நாகை டவுன் காவல் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியும், சங்க கொட்டகையின் மேற்கூரையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், நாகை எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் ஏஎஸ்பி பத்திரிநாராயணன் மேற்பார்வையில் நாகை டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் சங்க அலுவலகம் மற்றும் வேன்களை சேதப்படுத்திய  நாகை கீரைக்கொள்ளை தெருவை சேர்ந்த  காளிதாஸ் மகன் பாலுமகேந்திரன் (36), நாகை வடக்கு பால்பண்ணைச் சேரியை சேர்ந்த  கென்னடி மகன் காத்திக்குமார் (36),  நாகை சிக்கல்பத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்தி (19) ஆகிய மூன்று கார் டிரைவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்