SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணமாகாத விரக்தி சினிமா டான்சர் தற்கொலை

5/17/2019 12:45:53 AM

சென்னை: திருமணமாகாத ஏக்கத்தில் சினிமா டான்சர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பரத் (35). நடன கலைஞரான இவர், நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். மின்சார கனவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் டான்சராக பணியாற்றி உள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடன குழுவிலும் பணிபுரிந்து வந்தார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குழந்தைகளுக்கும் இவர்தான் நடன பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இவர் பல ஆண்டுகளாக திருமணம் ெசய்ய பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சரியான வாழ்க்கை துணை அமையவில்லை. இதுபற்றி சக நண்பர்களிடம் கூறி வேதனையடைந்துள்ளார்.

இதனால், கடந்த ஒரு வாரமாக மன வேதனையில் இருந்து வந்த பரத், அறையில் உடன் தங்கியுள்ள சக நண்பர்களிடமும் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பரத் வழக்கம்போல் அறையில் படுத்து இருந்தார். நேற்று காலையில் சக நண்பர்கள் எழுந்து பார்த்தபோது பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் பரத்துடன் தங்கி இருந்த சக நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்