SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி குப்பை கிடங்கில் தொடரும் தீ விபத்து

5/15/2019 6:24:40 AM

பொள்ளாச்சி, மே 15:  பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில் தொடரும் தீ விபத்தால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.  பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து, துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் உள்ளிட்டவை, வால்பாறை ரோட்டோரம் பேரூராட்சிக்குட்பட்ட கிடங்கில் கொட்டப்படுகிறது.  இந்த குப்பை கிடங்கில் வெயில் காலத்தில் தீ விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்த குப்பை கிடங்கில் சில மாதங்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். இதனால் சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக தீ எரிந்து கொண்டிருந்தது. பின் கட்டுக்குள் வந்தவுடன் அதன் மீது தண்ணீர் பாய்ச்சினர். ஆனால் தற்போது வெயிலின் தாக்கத்தால்,  மீண்டும் குப்பை கிடங்கில் தீ பிடித்துள்ளது.

நேற்று முன்தினம் அந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீர் என தீ பிடித்தது. அதிலிருந்து வெளியேறிய புகையானது அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். மேலும், வால்பாறை ரோட்டிலும் புகை மூட்டம் ஏற்பட்டதால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.   பின், தண்ணீர் விட்டு அணைக்கும் பணியில் ஈடுபட்டும்  எந்தவித முன்னேற்றமும் எற்படாமல், தொடர்ந்து புகை மூட்டம் இருந்தது. சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி குப்பை கிடங்கில் நேற்றும் தொடர்ந்து தீ எரிந்து புகை சூழ்ந்தது.

அதிகாரிகள் எதையும் பொருட்படுத்தாமலும், அடிக்கடி தீ விபத்து நடப்பதை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்தால், குப்பை கிடங்கிலிருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரவும் அபாயம் உண்டாகும்.  எனவே, குப்பை கிடங்கில் எரியும் தீயை போர்க்கால அடிப்படையில் முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்