SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மானாமதுரையில் சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம்

5/14/2019 2:49:02 AM

மானாமதுரை,மே 14:  மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள சோமநாதர் சன்னதியின் பின்புறம் சதாசிவ ப்ரம்மேந்திராள் விக்ரகம் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அவருக்கு கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆராதனை விழா நடத்துகின்றனர். ஆனந்தவல்லியம்மன்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கட்டுமானப்பணிகள் நடப்பதால் மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மகாலில் 39 ஆராதனை விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி, தீபாராதனை ஆகியவற்றுடன்  நிகழ்ச்சி துவங்கியது, மாலை பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கர்நாடக சங்கீத கச்சேரிகளை நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு பூஜைஉஞ்சவிருத்தி,9:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதி முன்பாக  குரு அஞ்சலி,கோஷ்டி கானமும்,10 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீப ஆராதனையும் மற்றும் ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்களின் கச்சேரிகளும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்