SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாபிராம் அழகு நிலையத்தில் 56 ஆயிரம் பணம் கொள்ளை

4/26/2019 6:46:02 AM

ஆவடி, ஏப். 26: திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வேலுபாபு (42). பட்டாபிராம் சிடிஎச் சாலை ரயில்வே கேட் அருகே அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு 16க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஊழியர்களை அனுப்பிவிட்டு வேலுபாபு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அழகு நிலையத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது 56 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் வேலுபாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்